ஒரு நற்செய்தியோடு தொடங்குவோம். “சவுதி அரசங்கம் குழந்தைகள் தவறாக பயன்படுவதை தடுக்கும் வகையில் 17 நல அமைப்புகளுக்கென அமைச்சரகமும், தினம் 16 மணி நேரமும், தொலைபேசியில் புகாரளிக்கும் புது வசதியும் செய்துள்ளது.” http://gulfnews.com/news/gulf/saudi-arabia/services-launched-to-help-victims-of-abuse-1.1143579
சில நாட்களுக்கு முன், 5 வயது சவுதி பெண் குழந்தை, இஸ்லாமிய மதபோதகராக பணி செய்யும் அதன் தந்தையால் வன்கொடுமை செய்யபட்டதும், அந்த பாலியல் வெறியன் “இரத்த பணம்” கொடுத்து வெளிவர இருந்ததும் சமூக தளங்களில் பரபரப்பாக கண்டிக்க பட்டது.
சிறிது தினங்களுக்கு முன் சில மத வெறியர்கள் சவுதி அரசாங்கத்தின் இணைய தளத்தினை சுட்டிகாட்டி, அந்த ஆள் நல்லவன் போலவும், சவுதி நீதிமன்றம் கடுமையாக இருக்கிறது எனவும், எனவே கண்டித்தவர்கள் மன்னிப்பு /மறுப்பு கோர வேண்டும் என்பது போல செய்தி வெளியிட்டிருந்தார்கள்.
உலக அளவில் பல செய்தி பத்திரிக்கையில் வந்த செய்தி எவ்வாறு பொய்யாக இருக்க முடியும் என்ற ஆச்சர்யம் தான் உடனே எழுந்தது. “கெட்டிகாரன் புளுகு” சீக்கிரம் வெளி வந்து தானே ஆக வேண்டும் ?
இதோ உண்மைகள். வெளியிட்டு இருப்பது பிரபல ஆங்கில & அரபு செய்தி நிறுவனங்கள் http://www.independent.co.uk/news/world/middle-east/saudi-royal-family-intervenes-over-preacher-released-despite-raping-and-killing-daughter-8491812.html
அரபு செய்திகள்
- பெண் குழந்தையின் மண்டை,கை,கால்,முதுகு எழும்புகள் உடைக்க பட்டு, சில உடல் பகுதிகள் எரிக்கப்பட்டு, பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு , கொலை செய்யப்பட்டு இருப்பது உண்மை. இதை மேலுள்ள அரபி பத்திரிக்கை செய்தியில் மருத்துவர் அறிவிக்கையில் காணலாம்.
- Al-Ghamdi எனும் கொடூரன் தனது குழந்தையை தடி, ஒயர் கொண்டு தாக்கியதை ஒப்பு கொண்டான் என பெண்கள் நல அமைப்பு கூறி இருக்கிறது
- சவுதி மத சட்டத்தின் படி குழந்தையை கொன்ற தந்தையையும், மணைவியை கொன்ற கணவனுக்கும் மரண தண்டனை கிடையாது
- ”நீதி”பதி Altkhvafa Ghamdi மதசட்டப்படி ”சிறிது காலம் ஜெயிலில் இருந்ததால், இரத்த பணம் மட்டுமே கோர முடியும்” என விசாரணையின் போது கருத்து உரைத்ததும் உண்மை. அந்த கொடூரன் வெளி வர இருந்ததும் உண்மை
- இச்செய்தியை கேள்வி பட்ட போராளிகள் நியாயம் கிடைக்க வேண்டி #AnaLama (I Am Lama) என்று சமூக இணையதளங்களில் போராடினர். உலகமே காறி துப்பியது . https://twitter.com/search?q=%23analama&src=typd
- பிறகு தான், எதிர்ப்பை பார்த்து சவுதி அரச குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, அக்கொடூரனுக்கு நீண்ட நாள் சிறை தண்டனை கிடைக்க உறுதி செய்ய முயற்சி செய்கின்றனர். அந்த கொடூரனின் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
- போராட்டத்தின் பயனாக குழந்தைகள் தவறாக பயன்படுவதை தடுக்கும் வகையில் 16 மணி நேர தொலைபேசியில் புகாரளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
எனவே மத சட்டம் இக் குழந்தைக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கு பதிலளிக்கவில்லை, மீண்டும் இதே தவறுகள் நடைபெறாமல் தடுக்கவில்லை. இன்றைய காலகட்டத்தின் சமூக மாற்றங்கள் எல்லாம், நியாயமான போராளிகளின் நல்லெண்ண முயற்சியிலும், தொழில்நுட்பத்தின் உதவியினாலுமே நடக்கின்றன என அணைவரும் அறிய வேண்டும்.
இவ்வாறு சமூக இணையதளத்தில், இஸ்லாமிய பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு நன்றி சொல்வது யார் ? மதத்திற்காக பொய் பேசியவர்களுக்காக மன்னிப்பு கோரப்போவது யார் ?
மேலும் ஆதாரங்கள்
- http://www.dailymail.co.uk/news/article-2273171/Fayhan-al-Ghamdi-raped-tortured-daughter-5-death-escapes-light-sentence.html
- http://www.thetimes.co.uk/tto/news/world/middleeast/article3685080.ece
- http://rt.com/news/saudi-preacher-fine-rape-333/