சாதி இல்லாத தமிழினம் !! (சாதியமும், சுயவஞ்சகமும்)

சமீபத்தில் சாதியை தமிழினத்திலிருந்து முற்றிலுமாக நீக்கும் அதி முக்கிய கண்டு பிடிப்பு வலையுலகில் நடந்திருக்கிறது.  இக்கண்டுபிடிப்பின் படி தமிழர்களிடம் சாதி இல்லை என்பதை கீழ் காணும் வகையில் சுலபமாக  நிறுவ முடியும்.

 

      1. சாதி இந்து மதத்தில் உள்ளது
      2. சாதி ஜீன் வழி பரம்பரை பரம்பரையாக வருகிறது
      3. தமிழர்கள் இந்துக்கள் அல்ல & பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல
      4. எனவே ஜீன் வழி பார்பனர்கள் சாதி வெறி பிடித்தவர்கள். என் ஜீன் வழி நான் சாதி வெறி பிடித்தவன் இல்லை (கூடவே என் பரம்பரை மக்களும் சாதி வெறி பிடித்தவர்கள் இல்லை! எப்பூடி ??)

 

ஆகவே சாதி ஒழிப்பு செய்ய சுலபமான வழி நான் ஒரு இந்து இல்லை என உரக்க கூவி கொண்டே சரஸ்வதி மந்திரம் சொல்வது தான். நீங்கள் சைவம், வைணவ, இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதங்களில் ஒருவர் ஆகிவிடுவீர்கள் உங்களுடைய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குறிய ஜீன் தொடர்பு உடனடியாக அறுக்க பட்டு உடனடியாக சுய பாவ மன்னிப்பு வழங்கப்படும். உங்கள் முன்னோர்கள் செய்த சாதிய விசத்திற்குரிய குற்ற உணர்வை கூட நீங்கள் எளிமையாக விட்டு விடலாம்.

 

சாதியத்தின் நவீன முகங்கள்

மக்களிடம் மாட்டி கொண்ட திருடர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் கூறி தான் யோக்கியவான் என்று நிரூபிக்க முயல்வது போல், இன்றைய சூழ்நிலையில்  ”பார்ப்பனீயம்” & ”உயர் சாதியம்” என்பவர்கள் அடித்து கொள்வது கீழ் தரமானது. பார்பணியம் என்று கூவுபவர்களில் சிலர் மற்ற உயர் சாதியினராய் இருப்பதிலும் அவர்கள் தங்களை முற்போக்காளர்களாக காட்டி கொள்ள முனைவதிலும் உள்ள குரூரம் சாதாரணமானதல்ல.

இன்றைய தினத்தில் சாதியத்தை எதிர்க்க காரணம் ஒரு குறிப்பிட்ட சந்ததியினரை அறியாமையில் ஆழ்த்தி, உழைப்பை சுரண்டி கொழுக்கும் திருட்டு சமூகத்தின் காட்டு மிராண்டித்தனம் தானே ? இன்று சாக்கடை சுத்தம் செய்யும் நண்பரின் உழைப்பை வேண்டாத மத, சாதி அமைப்புகள் எவை ?

வேறு இன காரர்களுக்கு தனி பாத்திரங்களை தரும், அவர்கள் உணவருந்தியபின் இடத்தை சுத்தம் செய்யும் முட்டாள்கள் இருக்கும் நாட்டில் தான், தன் சொந்த கிராம மக்களை தன் வீட்டிற்கு உள்ளே வரக்கூட அனுமதிக்காத மேல்(?) இன ஈனப்பிறவிகளும் இருக்கின்றன.

எந்த மனிதனும் ஆரிய பவனிற்கு சென்று உணவருந்த முடிகிற இக்காலத்தில் தான், மக்கள் தன் சொந்த கிராமத்திலுள்ள உணவகத்தின் அருகில் கூட செல்ல இயல முடியாத நிலை உள்ளது.

காதலை பயன்படுத்தி தன் இனத்தை பெருக செய்யும் இனப்பெருக்க ஜந்துக்கள் இருக்கும் நாட்டில் தான், காதலர்கள் தேடி பிடித்து கொல்லும் காட்டு மிராண்டிகளும் இருக்கின்றனர்.

உட்பிரிவுடன் கூடிய இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்த கூடிய சூழ்நிலையில் தானே அடித்தட்டு மக்களிடையே கூட ஒற்றுமை உள்ளது ? 90 வயது பெரியவரும் 9 வயது சிறுவனின் முன் செருப்பை தூக்கி கொண்டு நடப்பதும் அச்சிறுவன் அம்முதியவரை “வாடா முனியா” என்று அழைப்பதும் எந்த இனம் ?

எனவே என் ஜீன் உயர்ந்தது என்று கூறும் யோக்கியம் எந்த வெங்காயத்திற்கும் கிடையாது.

 

சுயவஞ்சகம்

சாதியம் தவறானது அதை முன்னோர்கள் செய்தனர் என்பது சரி. அதனால் குற்ற உணர்வு கொள்வது வரை சரி தான். அக்குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட தாங்கள் யோக்கியவான்கள் என்பதை காண்பிக்க ”சாதி என்பது பார்ப்பனியம் மட்டும்” எனும் பிரச்சாரம் நடந்தால் அது தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் சுயவஞ்சகம் தான்  அது தமிழினத்தை மீண்டும் ஒரு சாதிய படுகுழியிலேயே தள்ளும்.

 

உங்களுக்கு உண்மையிலேயே குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட மனசாட்சியுடன் சிந்தித்தால்

  1. உங்கள் மனதிலிருந்து உம்முடைய பரம்பரையின் உயர்வு நவிர்ச்சி மனப்பான்மையை தூக்கி எறியுங்கள்
  2. மனிதர்களிடையே உயர்ந்தவன் என்பதும் தாழ்ந்தவன் என்பது பிறப்பின் வழி இல்லையென உங்களுடைய குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்.
  3. முடிந்தவரை ஒடுக்கபட்டவர்களுக்கு உறுதுணையாயிருங்கள்

இவைதான் தமிழினத்திலிருந்து சாதியை ஒழிய செய்யும்; ”பார்ப்பனிய கொள்கை” பரப்புதல் அல்ல

 

இப்பதிவின் மூலம் சாதியை பார்ப்பணீயம் என்று பிரச்சாரம் செய்பவர்களும், நான் இந்த சாதியை சேர்ந்த மேலானவன் என்று அடையாளம் காட்டுபவர்களுக்கும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

 

இப்படிக்கு,

தனக்கு கீழே சிலரை வைத்து மிருக குணத்தையும், தனக்கு மேலே சிலரை உயர்த்தி அடிமை புத்தியையும் காட்டி கொண்டிருந்த கோடிக்கணக்கான தமிழர் பரம்பரையின் ஒரு ஜீன்

 

[குறிப்பு: இத்தகைய சிந்தணைகள் சில மாதங்களாகவே சிந்தையில் இருந்தது தான். சமீபத்திய வலையுலக நிகழ்வுகள் எரிச்சலை கிளப்பி பதிவை வெளியிட தூண்டியது]

16 கருத்துகள்:

  1. "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடிய பாரதி இன்று இருந்து இந்த கூத்துகளை எல்லாம் பார்த்திருக்க வேண்டும்!
    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில் இன்று கட்சி ஆரம்பித்து சாதி வளர்க்கின்றனர்.
    கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். (எந்த சாதி கடவுள் என்று கேட்டாலும் கேட்பார்கள்!)

    பதிலளிநீக்கு
  2. @பாலமுருகன்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. @பாலமுருகன்
    உங்களுக்கு இன்னும் பிரச்சிணையே புரியவில்லை.

    பாரதியார் எவ்வளவு தான் சாதி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும் இவர்கள் வார்த்தகளில் அவர் ஒரு பார்ப்பனர் தான்.

    அம்பேத்கார் எவ்வளவு தான் சீர்திருத்தம் மேற்கொண்டாலும் அவர் ஒரு தலித் தலைவர் தான்.

    தேசிய தலைவர்கள் என்ற புள்ளிக்கே வருவதில்லை.

    என்ன சொல்ல ?

    பதிலளிநீக்கு
  4. //மனிதர்களிடையே உயர்ந்தவன் என்பதும் தாழ்ந்தவன் என்பதும் பிறப்பின் வழி இல்லையென உங்களுடைய குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்.//

    அருமை. பாரதியின் வரிகளை சற்று மாற்றி, ”என்று மடியும் இந்த சாதியின் மோகம்.”

    பதிலளிநீக்கு
  5. @VijayaSamundeeswari

    போகணும், போய்தான் ஆகணும். இல்லையெனில் காலத்தால் போக வைக்க படும்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  6. சாதி என்பது அய்யர், அய்யங்கார் மட்டுமே!

    பார்பனீயம் என்பது சாதி வெறி!
    அது எந்த சாதியாக இருந்தாலும்!

    பதிலளிநீக்கு
  7. @வால்பையன்

    என்னங்க வால்பையன் இப்படி சொல்லிட்டிங்க ?!!

    சாதி எனும் சொல் தான் எல்லா சாதியையும் குறிக்கிறது

    பார்ப்பனியம் எனும் சொல் தான் ”அய்யர், அய்யங்கார்” மட்டும் குறிக்கிறது

    ஒரு உதாரணம்: அரசாங்கம் நம்மிடம் கேட்பது “சாதி” சான்றிதல் தான். பார்பனிய சான்றிதலா கேட்கிறது ?

    பதிலளிநீக்கு
  8. அரசு சாதி கேட்டால் அய்யர் அல்லது அய்யாங்கார் என எழுதுவீர்களா அல்லது பார்பான் என எழுதுவீர்களா!?

    அய்யரும், அய்யங்காரும் தான் சாதி,
    இல்லை அது தான் பார்பான் என்றால் நான் என்ன சொல்வது!

    பார்பனீயத்தின் விளக்கம் தெளிவாக என் பதிவில் சொல்லப்பட்டுள்ளதே!
    பார்பனீயத்தை கடைப்படிப்பவர்கள் பார்பனர்கள், அவர்கள் என்ன சாதியாக இருந்தாலும்!

    பதிலளிநீக்கு
  9. @வால்பையன்

    நீங்கள் அய்யர் அல்லது அய்யாங்கார் என எழுதுவீர்களா அல்லது பார்பான் என எழுதுவீர்களா வால்பையன் ? ;) எதற்கு இந்த கேள்வி ? :)

    நீங்கள் பார்ப்பான் என்ற சொல்லே எல்லோரையும் குறிக்கிறது என் பாமர மக்களுக்கு தெரியாத புது விளக்கத்தை இங்கு அளிக்கிறீர்கள். அது தான் ஆச்சரியப்பட வைக்கிறது :))

    பதிலளிநீக்கு
  10. சாதி வேறு(அய்யர், அய்யங்கார்)

    சாதி வெறி வேறு(பார்பனீயம்)

    அந்த சாதி வெறியை ஆரம்பித்து வைத்ததால் அய்யரையும், அய்யங்காரையும் பார்பனர்கள் என்று அழைக்கலாம், ஆனால் பார்பனீயம் சாதி வெறிபிடித்த அனைவரையும் தான் குறிக்கும்!

    சாதி வெறிபிடித்தவர்கள் மட்டுமே தன்னை பார்பனர்கள் என்றும் கூறி கொள்கிறார்கள், வேறு யாராவது சொல்ல பார்த்துள்ளீர்களா!?
    அய்யர் அல்லது அய்யங்கார் என்று தான் கூறுவார்கள்!

    இது புது விளக்கமல்ல, ஆண்டாண்டு காலமாக இருந்தது தான், நமக்கு இப்போ தான் தெரிஞ்சிருக்கு!

    பதிலளிநீக்கு
  11. @வால்பையன்

    பார்ப்பான் என்ற சொல் வழக்கில் சாதி வெறி பிடித்த எல்லோரையும் குறிக்கிறது என சொல்கிறீர்கள். அப்படி இருக்கின் ஒரு பிரச்சிணையும் இல்லை.

    பார்ப்பான் எனும் சொல்லை கூகிள் தட்டி பார்த்து விட்டு நிலைமை அது தானா என நீங்களே சொல்லவும்

    http://www.google.co.in/search?hl=en&client=firefox-a&hs=XlE&rls=org.mozilla%3Aen-US%3Aofficial&q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&meta=&aq=f&aqi=&aql=&oq=&gs_rfai=

    நான் கூற வருவது தவறு செய்யும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திட்டுவதை நிறுத்த அல்ல.

    ஆனால் அவர்கள் பெயரை பழித்து கொண்டு மற்றவர்கள் தங்களின் குற்றங்களை மறைக்கிறார்கள் என.

    புரியுமென நினைக்கிறேன்.

    இன்றும் கூட மக்கள் பேச்சு வழக்கில் சாதி பெயர் சொல்லி குறிப்பிட்ட மக்களை திட்ட “பார்ப்பான்” என்ற சொல்லை தான் பயன்படுத்துகிறார்கள்.


    நீங்கள் “பார்ப்பனீயம்” எனும் சொல்லை பயன்படுத்தினால் அதன் வீரியம் தவறு செய்யும் மற்ற மக்களை சென்று சேர்வதில்லை.

    பதிலளிநீக்கு
  12. //சாதி வெறிபிடித்தவர்கள் மட்டுமே தன்னை பார்பனர்கள் என்றும் கூறி கொள்கிறார்கள், வேறு யாராவது சொல்ல பார்த்துள்ளீர்களா!?
    அய்யர் அல்லது அய்யங்கார் என்று தான் கூறுவார்கள்!///
    பெரியார் நாயக்கருக்கு பிறகு பலர் இருக்கிறார்கள். இப்படி பெயரைப் பார்த்து சாதி வெறி என்பதைவிட அவர்களின் நடைத்தையில் வெறியிருந்தால் கூறுங்கள் வால் பையன் அவர்களே

    பதிலளிநீக்கு
  13. நான் சாதியியம் பதிவுகளில் பின்னூட்டம் இடுவதில்லை. உங்களது பதிவின் மூலம் ஜெயமோகனின் சாதி குறித்த பதிவுகள் படிக்க நேர்ந்தது. நல்ல நகைச்சுவையோடு நேரடியாக விஷயத்துக்கு வந்திருந்தார்.
    இங்கே உங்களது இது குறித்த சில பதிவுகளும் நல்ல நேர்மையான கண்ணோட்டத்திலேயே அமைந்திருக்கிறது.
    இந்த மாதிரி பதிவுகள் வரவேற்கத்தக்கது என்றாலும் நாம் இணையத்தில் (படித்தவர்கள் மத்தியில்) இதை சொல்லும் நிலையில் இருப்பது வருந்தத்தக்கதே. எப்படி சொன்னாலும் ஏற்கும் மக்கள் குறைவே. ஏற்பவர்கள் ஏற்கனவேஏற்றவர்கள்

    http://www.virutcham.com

    பதிலளிநீக்கு
  14. ஜோ வின் சாதிப் பதிவில் ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறேன். என்ன சொல்கிறார் பார்க்கலாம்

    http://www.virutcham.com

    பதிலளிநீக்கு
  15. @smart,@Virutcham
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  16. @Virutcham
    //நாம் இணையத்தில் (படித்தவர்கள் மத்தியில்) இதை சொல்லும் நிலையில் இருப்பது வருந்தத்தக்கதே.//
    கல்விக்கும், விழிப்புணர்விற்கும் இடையே உள்ள இடைவெளி அதிர்ச்சி அடைய வைப்பதும், வருந்த தக்கதும் தான்.

    பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)