நேற்று நடந்த விவாதத்தின் கடுமையை குறைக்கும் பொருட்டு எழுதிய பதிவு. நகைச்சுவையாகவே நண்பர்கள் எடுத்து கொள்ள வேண்டுகிறேன்.
பதிவுலகின் ஒரு பகுதியில்
பதிவின் கருத்து: பார்பனீயம் என்றால் என்ன என்பதற்க்கு சரியான அர்த்தம் தெரியாமல் அல்லக்கைகள் நம்மிடமே சண்டைக்கு வருகின்றன!
உரையாடல் 1:
[2008]
நண்பர் 1-: பார்பனியம் எனும் சொல் சிறு வயதில் பிராமணர்களை குறிக்கும் என கேள்வி பட்டிருக்கிறேன்
[2010]
நண்பர் 1: பார்பனியம் என்ற சொல் பாமர மக்களுக்கு என்ன வென்றே தெரியாது
நண்பர் 2: சரி கூகிள் ஐயா என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
[ Results 160,000 for பார்ப்பான். சில நிமிடங்களுக்கு பிறகு]
நண்பர் 1: பார்ப்பனியம் என்பது இப்போது திராவிடிஸ்டிகளால் தவறாக பயன்படுத்த படுகிறது
நண்பர் 2: பார்ப்பனியம் என்ற சொல்லே திராவிடர் கழகத்தினர் கண்டு பிடித்தது. பார்ப்பான் என்ற சாதி சொல்லில் இருந்து உருவானது. அது அப்போதய கால கட்டத்திற்கு தான் சரி.
உரையாடல் 2
நண்பர் 1: இப்போது பார்ப்பான் என்பது சாதியை குறிக்காது
நண்பர் 3: ஆனால் குடுமி வெளியே தெரியும்
நண்பர் 4: ஆம் துள்ளி வந்து குதிப்பான். அரிக்கும்
உரையாடல் 3
நண்பர் 2: நீங்கள் பார்ப்பனியம் என்று சொல்வதால் சாதி வெறியர்களுக்கு உறைப்பதில்லை. மதம் என்பது இப்போது பெரிய விசயமில்லை. பொருளாதார சுரண்டல்கள் அதிகமுள்ளன.
நண்பர் 5: சாதி, ஜாதிய அடுக்கு, வர்ணாசிரமம், வர்ண அடுக்கு, பார்பனியம்- அப்பாடா கோர்வையா வந்துருச்சு
நண்பர் 6: வர்ணாசிரமம் பார்ப்பனர்கள் தங்கள் மதம் மூலம் கண்டுபிடித்தது எனவே சாதி வெறியர்கள் பார்ப்பனர்கள்
நண்பர் 7: ஆம். வருணாசிரம கருமாந்திரத்தை ஒழிக்க மதம் மாறுவது தீர்வே இல்லை. வருண அடுக்கில் மேலே உள்ளவர்களாக பார்பனர்கள் தங்களை அறிவித்துக் கொண்டுள்ளனர்.
[மீண்டும் உரையாடல் 1ஐ படியுங்கள் :))]
சாதியை ஒழிச்சரலாமா பாஸ் ?!
உண்மை வாழ்க்கையின் ஒரு பகுதியில்
நண்பர் 1: நமக்கு இருக்கிற வேலை பளுவிற்கு எதற்கு இந்த வெட்டி விவாதம் அதனால் என்ன பயன் ?
நண்பர் 2: நாம் எழுதுவது யாராவது ஒருத்தர் மனதையாது யோசிக்க வைச்சா நல்லது தானே பாஸ் நாம் மட்டும் பதிவு போட்டு சாதியை ஒழிக்க முடியுமானால் எல்லோரையும் கெஞ்சி கேட்டாவது பதிவு எழுத வைப்பேன்.
நண்பர் 1: பதிவு போட்டு சாதி ஒழியும் என்றால் ”கழுத்தில் கத்தி வைத்தாவது ஒவ்வொருத்தனையும் பதிவு எழுத வைப்பேன்”
நண்பர்களின் சிரிப்போலியுடன் பதிவு முடிகிறது :))
பூனை கண்ணை மூடி கொண்டால் அதற்கு உலகம் இருண்டு விடும் என்ற பழமொழிக்கு நல்ல விளக்கம் கிடைத்தது. உண்மையில் மிகப்பெரிய தடுமாற்றங்களே நல்ல கருத்துக்களை வெளியிட தூண்டுகோலாக அமைகிறது. அர்சுனனின் தடுமாற்றத்தின் விளைவு கண்ணன் தந்த கீதை. நேர்மையான விவாதம் நடத்த முற்பட்டால் வால் பையன்களின் தடுமாற்றமும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தலாம் ...
//பார்ப்பனியம் என்பது இப்போது திராவிடிஸ்டிகளால் தவறாக பயன்படுத்த படுகிறது //
பதிலளிநீக்குபெரியார்ஷ்டுகள் என்று மாற்றி கொள்ளவும்!
அந்த ஸ்டேட்மெண்டில் பார்பன் என்ற சொல்லை பற்றி தான் பேசினோம், பார்பனீயம் பற்றி அல்ல!
நான் தான் சிறுவன், தப்பு பண்ணலாம், பெரியவர்(அது ”ர்ர்ர்” தான், நல்லா பாருங்கோ) நீங்களும் செய்யலாமா!?
நீங்க குறிப்பிடுற பார்ப்பான் வடகலையா, தென்கலையா?
பதிலளிநீக்குஐயோ! அடிக்காதிங்க அடிக்காதிங்க...
@வால்பையன்
பதிலளிநீக்குவாங்க வால்பையன்வாள். சரி தான் copy/paste சரி வர நடக்கலை. அது தான் பெரியண்ணண் நீங்க சரி செஞ்சுட்டிங்களே
ஆனா தப்பை ஒத்துக்குற பக்குவம் எல்லொருக்கும் வந்தா நல்லாதான் இருக்கும். [குறிப்பு: சாரி பாஸ் நீங்க பேசுர slang எனக்கு சரிவர வராது]
/பாலமுருகன் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"வாங்க சாதியை ஒழிக்கலாம் [நகைச்சுவை பதிவு]":
பதிலளிநீக்குநீங்க குறிப்பிடுற பார்ப்பான் வடகலையா, தென்கலையா?
ஐயோ! அடிக்காதிங்க அடிக்காதிங்க...
9/4/10 11:04 AM //
mmmmm.... தென்னங்குலை. :)))
இங்கு ஐயங்கார்களை மட்டும் குறிப்பிட்டு ஐயர்களை குறிப்பிடாமல் விடுவதை பார்ப்பனிய ஒழிப்பு சங்கத்தின் சார்பில் கண்டிக்கிறேன். :)
//ஐயோ! அடிக்காதிங்க அடிக்காதிங்க...//
வாங்க ஓடிருவோம்
நகைசுவை நகைசுவையாய் அருமை..
பதிலளிநீக்கு@அன்புடன் மலிக்கா
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!