காந்தியின் மீது கல்லெறிதல்

சமீபத்தில் படித்தவைகளில் காந்தி ஒரே விதமான கருத்து மத ரீதியாக முற்றிலும் எதிர் நிலைகளில் இருப்பவர்களால் பரப்ப பட்டது.

”காந்தி சாதியை ஆதரித்தார். அவர் ஒர் சாதி வெறியர்”

இதே விதமான குற்றசாட்டு பாரதியாரை நோக்கியும் வீசப்படுகிறது.

 

இவர்களின் மீது வீசப்படும் குற்றசாட்டுகளுக்கு ஆதாரமாக காட்டபடுவது இவர்கள் பயன்படுத்திய வர்ணாசிரமம் என்ற வார்த்தைகளின் அடிப்படையில். ஆனால் வர்ணாசிரமம் எனும் சொல் பழைய நூட்களில் முற்றிலும் வேறான நிலையில் பயன்படுத்த பட்டது. இப்போதைய சாதி எனும் பொருளில் அல்ல. கீதையை அதன் உண்மையான பொருளில் வாசிப்பவர்களுக்கு மனு நீதியில் சொல்லப்பட்ட திரிக்கபட்ட வர்ணாசிரமத்தில் உள்ள  முரண் வெளிப்படையாக தெரியும்.

 

    • கீதையில் விளக்கப்படும் வர்ணாசிரமம் வேறு இப்போதய சாதி வேறு . (மனு நீதி முதற் கொண்டு)
    • குலத்தொழிலும், பிறப்பின் அடிப்படையிலான சாதியும் ஒழிக்க பட வேண்டும்.
    • வேலையை வைத்து உயர்வு தாழ்வு கற்பித்தலும் ஒழிய வேண்டும்.

      http://sabaritamil.blogspot.com/2009/11/blog-post.html

 

ஆனால் சாதி என்பது குலத்தொழிலின் அடிப்படையில் சில சமூகத்தினரை இழிபொருளாக பார்க்கபடும் நிலை வந்ததுமே சமூகத்தை முழுமையாக கேடு கெட்ட நிலைக்கே கொண்டு சென்றது.


DSC02078//காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று.//

//1931ல் காந்தி எழுதினார் ” நான் நவீன அர்த்தத்தில் சாதி அமைப்பில் நம்பிக்கை கொள்ளவில்லை. அது ஒரு சமூகத்தீங்கு, முன்னேற்றத்துக்கு தடை. மனிதர்கள் நடுவே உள்ள எவ்வகையான ஏற்றதாழ்வுகளையும் நான் நம்பவில்லை. நாமெல்லாம் மூற்றிலும் சமம். சமத்துவம் என்பது ஆன்மாவிலே ஒழிய உடல்களில் அல்ல….புறவயமாக தெரியும் //


//சாதியை அழிப்பதற்கு மிகச்சிறந்த மிகவேகமான தடையற்ற வழி என்னவென்றால் சீர்திருத்தவாதிகள் அதை தங்களிடமிருந்தே தொடங்குவதுதான். தேவையென்றால் அதற்காக அவர்கள் சமூகத்தின் புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவேண்டும் .மாற்றம் படிபப்டியாக ஆனால் உறுதியாக நிகழும்”
சொன்னதை தானே செய்வதற்கும் காந்தி தயாரானார். மார்க் லிண்ட்லே கோராவுக்கும் காந்திக்கும் இடையேயான உறவைச் சுட்டிக்காட்டுகிறார். பிறப்பால் பிராமணரான கோரா தன் சாதியை துறந்தார்.அதற்காக அவர் வேலையை விட்டு துரத்தப்பட்டார். தலித் மக்கள் நடுவே சேவைசெய்த கோராவை 1944 ல் காந்தி தன் ஆசிரமத்துக்கு அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டார்.//


//1945 ல் காந்தி எழுதினார். ”பெண்ணுக்கு எந்த தகுதி இருந்தாலும் திருமணம் ஒரே சாதிக்குள் என்றால் என் ஆசீர்வாதத்தை தயவுசெய்து கோராதீர்கள். அவள் வேறு சாதி என்றால் மட்டுமே நான் என் ஆசீர்வாதத்தை அனுப்புவேன்”//


//இனிமேல் கவனியுங்கள், காந்தியை அவதூறுசெய்து வெளியிடப்படும் எந்த ஒரு ஆய்வேட்டுக்கு அல்லது நூலுக்குப் பின்னாலும் ஓர் அயல்நாட்டு பல்கலைக் கழகம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு கிறித்தவ மதப்பரப்பு நிறுவனத்தின் நிதியுதவி இருக்கும்.//

--http://www.jeyamohan.in/?p=4103

 

[படம்: பிப்ரவரி 23, 1946 அன்று தாழ்த்தப்பட்டவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டபோது, முதல்முறையாக காந்தி அக்கோவிலுக்குள் செல்லும்காட்சி.
http://jssekar.blogspot.com/2009/08/blog-post_23.html]

 

சாதியின் இன்றைய நிலை

    • மக்களிடையே உருவாக்க படும் பரம்பரை பெருமை எனும் மந்தை குணமே இன்றைய சாதி நிலமைக்கு முதற் காரணமாக இருக்கிறது.
      • பரம்பரை பரம்பரையாக சிறுமை படுத்த பட்ட மக்கள், தங்களுக்கு அடிமையாக இருப்பதையே விரும்பும் தன் முனைப்பு
      • தங்களுடைய  தன் இன மக்கள் ”நாடாண்ட வம்சம்”, “கட்டியாண்ட வம்சம்” என்று போலி பெருமிதங்களின் மூலம் ஏற்றி விடப்படும் சாதி வெறி
    • பொருளாதார தேவைகள்
      • சில மக்களை அறியாமையில் ஆழ்த்தி அடிமை பணிகளில் ஈடுபடுத்தி பொருளாதார ரீதியாக சுரண்டுவது
      • பொருளாதார ரீதியாக முன்னேறிய தன் சாதி மக்களிடம் கிடைக்கும் பொருளாதார பலன்கள் எனும் நம்பிக்கை
    • திரிக்கப்பட்ட மத நம்பிக்கைகள்

      http://sabaritamil.blogspot.com/2010/04/blog-post.html

 

21ம் நூற்றாண்டில் சங்கங்கள் இல்லாத சாதியே இல்லை எனும் நிலைமை உருவாகி விட்டது, சாதி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பின்னடைவு. ஒரு திறந்த சவால் என்னிடமிருந்து இன்றைய சாதி சங்க தலைவர்களில்,

  1. எத்தணை பேர் மனு நீதியை கேள்வி பட்டிருக்கிறார்கள்? (மனு நீதியின் மக்களை வகைப்படுத்தல் திரிக்கபட்டது)
  2. எத்தணை பேர் அந்நூட்களை பார்த்து இருக்கிறார்கள் ?
  3. எத்தணை பேர் அதன் பொருள் உணர்ந்து இருக்கிறார்கள்?
  4. எத்தணை பேர் அதனை ஏற்று கொள்கிறார்கள் ? (ஏனெனில் அதில் தவறாக கூறப்பட்ட பிரிவு மக்கள் கூட சாதி வெறியில் முன்னணியில் இருக்கின்றனர் !!!)

 

திரிக்கப்பட்ட வர்ணாசிரமம் மட்டுமே சாதிக்கான காரணமாக இருப்பது 21ம் நூற்றாண்டில் காலாவதியாகி விட்டது. பொருளாதார ரீதியான காரணம் பூதாகரமாக இருக்கிறது.  நோய்க்கான காரணம் ஒன்றாக இருக்க நாம் தவறான சிகிச்சை செய்து வருகிறோம் என்பதே சாதி சங்கங்கள் பெருகி இருக்கிறது என்பதற்கான காரணங்கள்.

 

காந்தியும், பாரதியும் குறை சொல்லும் முன்னர் அவர்களின் வாழ்க்கை, வாழ்ந்த சூழலையாவது தெரிந்து கொள்வதே அடிப்படை நேர்மை. இல்லையெனில் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை கோமாளியாகவே காட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)