நெடுநாளைய காத்திருப்பின் சந்திப்பிற்கு பிறகு ஆத்ம நண்பன் கேட்டான்
“கடவுளை தேடவோ நாம் பிறந்திருக்குறோம் ?”
நவின்றேன் நான்
“கடவுள் எப்படி கடவுளை தேட முடியும் ?”
நான் என்னிலும் நீ உன்னிலும் காண்பது மட்டுமல்ல கடவுள்
நான் உன்னிலும் நீ என்னிலும் காண்பதும் கடவுள்
நாம் நம்மிலும் நாம் பிறரிலும் காண்பதும் கடவுள்
நான் என்பது தன்னை தானே தேடும் பிம்பகடவுள்
தேடி தேடி ஓய்ந்த பின் தன்னை தான் உணர்ந்து
எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பதும் கடவுள்
--வால்பையனுடனான சந்திப்பு இனிமையாக இருந்தது. வால்பையனிற்கு நன்றிகள்.
good said.
பதிலளிநீக்கு//கடவுள் எப்படி கடவுளை தேட முடியும்// மனிதர்கள் எல்லாரும் கடவுள்கள் என்றால் அந்த கடவுளே எனக்கு வேண்டாம் :)
பதிலளிநீக்குநண்பரே, கடவுள் மனிதனுள் இருக்கிறார் என்பது கடவுளின் அருள் அவனுக்கு உண்டு, கடவுளின் துணை அவனுக்கு உண்டு என்றுதான் அர்த்தம். கடவுள் எங்கும் இருக்கிறார் என்றவுடன் காண்பதெல்லாம் கடவுள் என்று நினைப்போரும் உண்டு. ஆனால் கடவுளின் படைப்புகள்தான் நாம் காண்பது, படைப்புகளே கடவுள்கள் ஆக முடியாது. கடவுள் என்பது ஒரு மாபெரும் சக்தி. ஒரு நோய் வந்தவுடன் தாக்குபிடிக்கமுடியாமல் தடுமாறி விழும் மனிதனை கடவுளோடு ஒப்பிட முடியாது. கடவுள் கடவுள்தான், மனிதன் மனிதன்தான். இது என்னுடைய தனிப்பட்ட புரிதல்.
@Madurai Saravanan
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@Robin
பதிலளிநீக்குபிதா, சுதன் மற்றும் பரிசுத்த ஆவி மூவரும் உயர் தளத்தில் ஒன்றே, கீழ் தளத்தில் வெவ்வேறு.
நாம் உணர வேண்டியது சத் சித் ஆனந்தம் தான்
நன்று.
பதிலளிநீக்குகட + உள் = கடவுள்
@பாலமுருகன்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தெளிவா இருக்கும் போது இன்னொருக்கா சந்திப்போம் நண்பரே!
பதிலளிநீக்கு@வால்பையன்
பதிலளிநீக்குசரிங்க. மீண்டும் ஒரு நல்ல நாளில் சந்திப்போம்